/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரசார கருத்தரங்கம்பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரசார கருத்தரங்கம்
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரசார கருத்தரங்கம்
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரசார கருத்தரங்கம்
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரசார கருத்தரங்கம்
ADDED : ஜன 01, 2024 12:20 AM
விழுப்புரம் : கரசானுார் வி.சி.டி.எஸ்., மையத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தொடர் பிரசார கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட சமூக நலத்துறை, வெள்ளக்குளம் வி.சி.டி.எஸ்., அதேகொம், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் எம்மாவுஸ் சார்பில் 'நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது' தலைப்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, நவஜோதி பெண்கள் இயக்க அமைப்பாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வானுார் ஒன்றிய குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, திண்டிவனம் கருணை மன்ற நிறுவனர் ஏழுமலை.
புதுச்சேரி மதர் அறக்கட்டளை போதை மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, மாவட்ட மைத்ரி ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, அதேகொம் பின்னகத்தின் சட்ட ஆலோசகர் பிரகாஷ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சாரா, மெத்தில்டு ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் 15 கிராமங்களில் இருந்து, 170 பெண்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.