/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அண்ணாதுரை பிறந்தநாள் தி.மு.க., உறுதிமொழி ஏற்பு அண்ணாதுரை பிறந்தநாள் தி.மு.க., உறுதிமொழி ஏற்பு
அண்ணாதுரை பிறந்தநாள் தி.மு.க., உறுதிமொழி ஏற்பு
அண்ணாதுரை பிறந்தநாள் தி.மு.க., உறுதிமொழி ஏற்பு
அண்ணாதுரை பிறந்தநாள் தி.மு.க., உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 17, 2025 12:29 AM

விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாட்ட தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி, 569 பூத்களில் 'மண், மொழி, இனம் காக்கவும், தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன், அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், மாவட்ட பொறுப்புக்குழு கண்ணன், நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றி வேல், நகரமன்ற தலைவர் தமிழ்செல்விபிரபு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி, சிறுபான்மையினர் அணி தாகிர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், விளையாட்டு மேம்பாட்டு அணி பாரத், ஒன்றிய செயலாளர் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற உறுப்பினர்கள் ஜனனிதங்கம், சாந்தராஜ், புல்லட் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் வழுதரெட்டி, கோலியனுார் பகுதியில் நடந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளில் லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வார்டு செயலாளர் பாபு, முத்துகணேசன், கலைச்செல்வன், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.