/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., முப்பெரும் விழா பங்கேற்க அழைப்பு தி.மு.க., முப்பெரும் விழா பங்கேற்க அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா பங்கேற்க அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா பங்கேற்க அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா பங்கேற்க அழைப்பு
ADDED : செப் 17, 2025 12:29 AM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட தி.மு.க., வினர், கரூர் முப்பெரும் விழாவில் பங்கேற்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., சார்பில் இன்று கரூரில் முப்பெரும் விழா நடக்கிறது. இந்த விழாவில், பங்கேற்க இன்று காலை 7:00 மணியளவில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திலிருந்து, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலை மையில் புறப்பட இருப்பதால், மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சியினர் பெருந்திரளாக செல்வதற்கு தயாராக வரவேண்டும்.
முப்பெரும் விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர் கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.