ADDED : செப் 21, 2025 11:01 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகர அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. மேல்தெரு அண்ணா திடலில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா செந்தில் தலைமை வகித்தார்.
நகர துணை செயலர் வக்கீல் செந்தில் வரவேற்றார்.
மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலர் செங்குட்டுவன், முன்னாள் நகர செயலர் ஜானகிராமன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ் முன்னிலை வகித்தனர்.
வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் துவக்க உரையாற்றினார். அ.தி.மு.க., கொள்கை பரப்பு மாநில துணை செயலர் கோபி காளிதாஸ் சிறப்புரையாற்றினார்.
கவுன்சிலர்கள் சேகர், பத்மாவதி பாஸ்கர், நகர அவை தலைவர் பால்ராஜ், வழக்கறிஞரணி சுபாஷ், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், நகர நிர்வாகிகள் கலவு, குணா, ஹைதர்ஷெரீப், ஜாகீர், அன்பு, சிவா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.