Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி? கூடுதல் கலெக்டர் விளக்கம்

வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி? கூடுதல் கலெக்டர் விளக்கம்

வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி? கூடுதல் கலெக்டர் விளக்கம்

வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி? கூடுதல் கலெக்டர் விளக்கம்

ADDED : செப் 21, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 166 மாணவர்களுக்கு, ரூ. 3 கோடி மதிப்பில் கல்விக்கடன்களை கூடுதல் கலெக்டர் பத்மஜா வழங்கினார்.

மயிலம் பொறியியல் கல்லுாரி கூட்டரங்கில், மாணவர்களின் உயர்கல்விக்கான சிறப்பு வங்கி கடன் முகாம் நடைபெற்றது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. பொறியியல், மருத்துவம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இம்முகாமில், முதற்கட்டமாக 166 மாணவர்களுக்கு ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை கூடுதல் கலெக்டர் பத்மஜா வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலும், கல்வி கடன் முகாம் நடத்தப்படுகிறது.

மேலும், மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு, https://pmvidyalaxmi.co.in/StudentLogin.aspx என்ற இணையதளத்தில் தங்களின் ஆதார், பேன் கார்டு, புகைப்படம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானச் சான்று, கல்லுாரி கட்டண விபர சான்று, பெற்றோர்களின் ஆதார் மற்றும் பேன் கார்டு, கல்லுாரி சேர்க்கை கடிதம் போன்ற ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உயர்கல்விக்கான கடனை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், இந்தியன் வங்கி புதுச்சேரி துணை மண்டல மேலாளர் சுப்ரமணி, விழுப்புரம் இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் தமிழ்மணி சுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நசிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us