ADDED : செப் 21, 2025 11:01 PM
விழுப்புரம்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சிறுகடம்பூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள செட்டிப்பாளையம் ஏரிக்கரை பகுதியில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுகடம்பூரை சேர்ந்த விஷ்ணு, 32; செஞ்சி என்.ஆர்.பேட்டையை சேர்ந்த கபிலன், 52; சிங்கவரத்தை சேர்ந்த குமரேசன், 41; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, புள்ளி தாள்கள் மற்றும் ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.