ADDED : செப் 21, 2025 11:02 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் நேற்று முன்தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமை பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வேங்கட வரதராஜப்பெருமாள் கோவிலில், துளசி மாலை சாற்றி, பெருமாளை வழிபட்டனர்.
தொடர்ந்து, பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.