/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 8.14 லட்சம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உ.பி.,கள் 'கர்வம்' ; 7 தொகுதிகளும் எங்களுக்குத்தான் 8.14 லட்சம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உ.பி.,கள் 'கர்வம்' ; 7 தொகுதிகளும் எங்களுக்குத்தான்
8.14 லட்சம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உ.பி.,கள் 'கர்வம்' ; 7 தொகுதிகளும் எங்களுக்குத்தான்
8.14 லட்சம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உ.பி.,கள் 'கர்வம்' ; 7 தொகுதிகளும் எங்களுக்குத்தான்
8.14 லட்சம் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உ.பி.,கள் 'கர்வம்' ; 7 தொகுதிகளும் எங்களுக்குத்தான்
ADDED : செப் 16, 2025 03:30 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுரையின்படி, 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற திட்டத்தின்படி, உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., ெபாறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மஸ்தான் தலைமையில், ெசஞ்சி தொகுதியில் 40 ஆயிரம், திண்டிவனம் தொகுதியில் 36 ஆயிரம், மயிலம் தொகுதியில் 35 ஆயிரத்து 800 பேர் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 50 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 41 ஆயிரத்து 955 ேபர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த தேர்தலைவிட கூடுதலாக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 800 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., ெபாறுப்பாளரான முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி தலைமையில், திருக்கோவிலுார் தொகுதியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 305, விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ேபரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில், விழுப்புரம் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 9 ேபரும், வானுார் தொகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 639 ேபரும், உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரத்து 408 ஓட்டுகளை, தி.மு.க., கூட்டணி பெற்றது. தற்போது தி.மு.க.,வில் மட்டும் 8 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதால், கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இத்துடன், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஓட்டுகள் கணிசமாக கிடைக்கும் என்பதால், மாவட்டத்தில் உள்ள 7 ெதாகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.