/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் குவியும் மக்கள்: டாக்டர்கள் பற்றாக்குறை நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் குவியும் மக்கள்: டாக்டர்கள் பற்றாக்குறை
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் குவியும் மக்கள்: டாக்டர்கள் பற்றாக்குறை
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் குவியும் மக்கள்: டாக்டர்கள் பற்றாக்குறை
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் குவியும் மக்கள்: டாக்டர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 16, 2025 03:29 AM
ஏ ழை, எளிய மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறப்பதை தடுக்கவும், நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, உரிய சிகிச்சை மூல ம் ஆரோக்கியத்தையும், உயிரையும் காக்க கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தமிழக அரசு 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை துவங்கியது.
இந்த திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றனர். 38 மாவட்டங்களில் 1,256 முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 முகாம்களை நடத்த உள்ளனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட முகாம்கள் நடந்து வருகிறது.
இதில் பொது மருத்துவத்துடன் சேர்ந்து 17 வகை உயர் சிறப்பு சிகிச்சையளிக்கின்றனர். நோய்களை கண்டறியும் பரிசோதனைகளை இந்த முகாமில் மேற்கொள்கின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் நடந்த முகாம்களில் எதிர்பார்த்ததை விட மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் நடந்த முகாமில் 6000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இதை நல்வாழ்த்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வந்திருந்த நோயாளிகளின் பெயரை கம்ப்யூட்டரில் பதிவேற்றி க்யூஆர் கோடுடன் பதிவு சீட்டை கொடுக்கவே போதிய கம்ப்யூட்டர்கள் இல்லை. இதனால், 3,800 பேருக்கு மட்டுமே பதிவு செய்து சிகிச்சையளிக்க முடிந்தது.
இதில் பொது மருத்துவத்திற்கு 25க்கும் மேற்பட்ட டாக்டர்களும், சிறப்பு உயர் சிகிச்சைக்கு 17 டாக்டர்களும் வந்திருந்தனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக சிகிச்சையளித்த டாக்டர்கள் ஒரு கட்டத்தில் சோர்ந்தனர்.
எனவே, நலம்காக்கும் ஸ்டாலின் முகாமில் உயர் சிகிச்சைக்கான டாக்டர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிரிப்பதுடன், கணினி வசதியை அதிகரித்து, கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். இல்லை எனில் இந்த முகாம்கள் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்.