/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 16, 2025 03:30 AM

திண்டிவனம் : செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதியின் சட்டசபை தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் மயிலம் புகழேந்தி, திண்டிவனம் ஜாபர் அலி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மஸ்தான் பேசினார்.
கூட்டத்தில் நாளை 17ம் தேதி கரூரில் நடைபெறும் தி .மு.க., முப்பெரும் விழா வில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திரளாக பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார்.
ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், பழனி, தயாளன், மணிமாறன், மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, செந்தில்குமார், செந்தில், முருகன், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் பிரகாஷ், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.