/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
ADDED : மார் 25, 2025 04:17 AM
மரக்காணம்: வானுார் அடுத்த தலக்காணிக்குப்பத்தில் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
வானுார் அடுத்த தலக்காணிக்குப்பத்தில் வருவாய், காவல்துறை ஒத்துழைப்போடு சில மாதங்களாக கூழாங்கற்கள், செம்மண் கடத்தலில் சமூக விரோதி கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தலக்காணிக்குப்பத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தனபால் என்பவர் நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் 2 டிப்பர் லாரிகளில் செம்மண் கடத்தலில் சிலர் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் 2 டிப்பர் லாரிகளில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது தொரியவந்தது.
உடன் டிப்பர் லாரிகள், பொக்லைனை பறிமுதல் செய்து, மன்னார்சாமி கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார், 54; ஆலங்குப்பம் ராமசந்திரன், 35; பொக்லைன் டிரைவர் கிளியனுார் சிவா, 45; ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் நிலத்தின் உரிமையாளர் தனபால் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.