/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி ஏரியில் சேதமடைந்த கலிங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விக்கிரவாண்டி ஏரியில் சேதமடைந்த கலிங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விக்கிரவாண்டி ஏரியில் சேதமடைந்த கலிங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விக்கிரவாண்டி ஏரியில் சேதமடைந்த கலிங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விக்கிரவாண்டி ஏரியில் சேதமடைந்த கலிங்கல் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 04:17 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெரிய ஏரியில் சேதமடைந்த கலிங்கல் மற்றும் ஏரி நீர் பாசன வாய்க்காலை சீரமைத்து ஏரியில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சி ஏரி 300 ஏக்கர் பரப்பளவும், 2 கலிங்கல் மற்றும் 5 மதகுகளை கொண்டுள்ளது. இந்த ஏரியின் நடுவே நான்கு வழி புறவழிச் சாலையும் செல்கிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசன வசதி அளவு அதிகமாக இருந்தாலும் தற்போதுள்ள நிலையில் ஏரியில் அடர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளாலும், சீமக் கருவேல மரங்களாலும் ஆக்கிரமித்துள்ளது. மேலும், ஏரியில் மேற்கு பகுதியில் உள்ள கலிங்கல் சேதமடைந்துள்ளது.
இதனால், கடந்த பெஞ்சல் புயலின் போது ஏரி நிரம்பியும் ஒரு போக சாகுபடி அளவிற்கு கூட போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்த இந்த கலிங்கலில் கற்கள் பெயர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏரி நீர் செல்லும் பாசன வாய்க்காலில் பெரும்பாலன இடங் களில் ஆங்கிரமிக்கப்பட்டும் புதர்கள் மண்டியும் உள்ளது.
ஏரிக்கு நீர் வரத்து வரக்கூடிய முகப்பு பகுதியான மேலக்கொந்தை பகுதியிலிருந்து தண்ணீர் வரத்து வாய்காலில் அடர்ந்துள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும். ஏரியின் மேற்கு பகுதியில் சேதமடைந்த கலிங்கலை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை வைக்கும் நேரங்களில் மட்டும் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கலிங்கலை பார்வையிட்டு சென்று விடுகின்றனர். அதன் பிற்கு கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த கோடை காலத்தில் ஏரி கலிங்கலை சீரமைத்தால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.
தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தாலும், விவசாயத்திற்கு முக்கியமான ஏரி கலிங்கலை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ., வும், கலெக்டரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கொண்டு சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.