ADDED : பிப் 11, 2024 10:19 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று திருப்பாச்சனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகம்,43; பொன்னம்பலம் மகன் ஜெகநாதன்,53; அரசூர் சேகர் மகன் சந்துரு,21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.