யு.பி.எஸ்.சி., தேர்வர் மரணம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி
யு.பி.எஸ்.சி., தேர்வர் மரணம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி
யு.பி.எஸ்.சி., தேர்வர் மரணம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி
UPDATED : ஜூலை 26, 2024 08:03 AM
ADDED : ஜூலை 25, 2024 07:05 PM

புதுடில்லி: டில்லியில் யு.பி.எஸ்.சி., தேர்வர் மின்சாரம் தாக்கிய உயிரிழந்த சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் நிலேஷ் ராய் 26, இவர் ஐ,.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போட்டித்தேர்வுக்காக யு.பி.எஸ்.சி., எனப்படும் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டி டில்லி பட்டேல் நகரில் தங்கி படித்து வந்தார்.
சம்பவத்தன்று டில்லியில் பெய்த மழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இது குறித்து டில்லி ஆம் ஆத்மி மின்துறை அமைச்சர் அதிஷி கூறியது, நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. விலைமதிப்பில்லாத உயிர் பறிபோயுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடி
இந்த சம்பவம் சக தேர்வர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவத்திற்கு டில்லி தலைமை செயலாளர், அரசு நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என புகார் எழுந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கைது செய்யக்கூடிய குற்ற வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த டில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.