/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைதிண்டிவனத்தில் வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
திண்டிவனத்தில் வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
திண்டிவனத்தில் வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
திண்டிவனத்தில் வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
ADDED : ஜன 25, 2024 06:26 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கீரைக்கார வீதியை சேர்ந்தவர் சரவணன்,38; கள்ளக்குறிச்சியில் பவர் டூல்ஸ் இரும்பு கடை நடத்தி வருகிறார். திண்டிவனத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வார விடுமுறையின் போது வந்து செல்வது வழக்கம். இதனால் வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கும்.
தற்போது சரவணன் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள சரவணனின் பூர்வீக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். வேறு ஒரு இடத்தில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.
தகவலறிந்த திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், முகத்தை மூடியிருந்த இரு வாலிபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா சென்றுள்ள சரவணன் வந்த பிறகே திருடு போன பொருட்களின் விபரம் தெரிய வரும்.