/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சியில் போலி நகை கொடுத்து அடகு கடையில் ரூ.2.10 லட்சம் மோசடிசெஞ்சியில் போலி நகை கொடுத்து அடகு கடையில் ரூ.2.10 லட்சம் மோசடி
செஞ்சியில் போலி நகை கொடுத்து அடகு கடையில் ரூ.2.10 லட்சம் மோசடி
செஞ்சியில் போலி நகை கொடுத்து அடகு கடையில் ரூ.2.10 லட்சம் மோசடி
செஞ்சியில் போலி நகை கொடுத்து அடகு கடையில் ரூ.2.10 லட்சம் மோசடி
ADDED : ஜன 11, 2024 03:59 AM
செஞ்சி: செஞ்சி அடகு கடையில் போலி நகையை கொடுத்து 2.10 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி காந்தி பஜாரில் உள்ள அடகு கடை ஒன்றில் கடந்த 3ம் தேதி ஆட்டோவில் பர்தா அணிந்து வந்த மூன்று பெண்கள் 51 கிராம் நகைகளை அடகு வைத்து கொண்டு பணம் கேட்டனர்.
அடகு கடைகாரர் சோதனை செய்த போது அதில் ஹால் மார்க் சீல் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த நகைக்கடை ஒன்றின் சீலும் இருந்துள்ளது.
இதை நம்பிய அடகு கடை காரர் நகைகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அடகு கடைக்கு வந்த ஆட்டோ டிரைவர், நகை அடகு வைத்த பெண்கள் ஆட்டோவை வேகமாக ஓட்டி செல்லும் படி கூறி, மார்க்கெட் கமிட்டி அருகே இறக்கி விட்டதும் அங்கிருந்த காரில் ஏறி வேகமாக சென்றனர்.
எனவே நகைகளை சோதித்து பார்க்கும் படி கூறினர். அதன்பேரில் நகைகளை சோதித்து பார்த்தில், அனைத்து போலி என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.