/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மலையனுார் கோவில் உண்டியலில் ரூ.1.11 கோடி காணிக்கைமலையனுார் கோவில் உண்டியலில் ரூ.1.11 கோடி காணிக்கை
மலையனுார் கோவில் உண்டியலில் ரூ.1.11 கோடி காணிக்கை
மலையனுார் கோவில் உண்டியலில் ரூ.1.11 கோடி காணிக்கை
மலையனுார் கோவில் உண்டியலில் ரூ.1.11 கோடி காணிக்கை
ADDED : பிப் 24, 2024 06:44 AM
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல் என்னும் பணி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடந்தது.
ஹிந்து சமய உதவி ஆணையர் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருவக்கரை செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ஒரு கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 281 ரூபாயும், 442 கிராம் தங்க நகைகள், 1,405 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.