
விழுப்புரம் : விழுப்புரம் மனவளக்கலை மன்றத்தின் சார்பில், வின்னர் பயிற்சி மையத்தில் சர்வதே யோகா தினம் நடந்தது.
விழுப்புரம் மனவளக்கலை மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் கலைவாணி, பேராசிரியர்கள் வேணு, பிரேமா, ஆறுமுகம், ரங்கராஜலு, நாராயணன், உலகநாதன், செல்வி, கனகவள்ளி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தனர்.
வின்னர் பயிற்சி மைய தலைவர் ராமராஜா சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பங்கேற்றனர்.