/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஜூன் 26, 2024 02:40 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தி.மு.க., வேட்பாளர் சிவாவுக்கு அமைச்சர் மஸ்தான் ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான செ.கொளப்பாக்கம், செ.புதுார், நகர் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் மஸ்தான், வேட்பாளர் சிவாவை ஆதரித்து பேசுகையில், 'கடந்த 3 ஆண்டு கால நல்லாட்சிக்கு அத்தாட்சியாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றியை தந்துள்ளீர்கள். நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றியை தர உள்ளீர்கள்.
இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேட்பாளர் சிவா இந்த தொகுதி மேலும் பல திட்டங்களை செய்து தர மறக்காமல் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்' என்றார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், சேதுநாதன், ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் ஜீவா, மாவட்ட துணைச் செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம்.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், செழியன், தயாளன், பிரபாகரன், ராம சரவணன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி வினாயகமூர்த்தி, ஆவின் இயக்குனர் தினகரன், அணி அமைப்பாளர்கள் வினோத், பிரேம், ஒன்றிய தலைவர் சீனுவாசன், கிளைச் செயலாளர் வேதநாயகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கில்பர்ட், எத்திராசன், வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.