/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 17, 2024 06:16 AM

விழுப்புரம், : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, பொருளாளர் அந்தோணிதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலாஜி, அமலா, துாய்மைக் காவலர் சங்கரி முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் சவுரிராஜன், மண்டல பொருப்பாளர் பொன்னன், மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில், உள்ளாட்சித் துறையில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி, ஊதியம் வழங்க வேண்டும். ஐகோர்ட் தீர்ப்பின்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாநில நிர்வாகிகள் குழு வளர்மதி, மாவட்ட தலைவர் இன்பஒளி, துணைத் தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். துணைச் செயலாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.