/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 17, 2024 06:14 AM

விழுப்புரம், : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலை 11:00 மணிக்கு 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தங்களையே ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், மாதாந்திர உதவித் தொகைக்காக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி, அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அப்போது அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், சங்க நிர்வாகிகள் சிலர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து விட்டு, 12.00 மணிக்கு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.