/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் தொகுதி தபால் ஓட்டு அ.தி.மு.க.,வை முந்திய பா.ம.க., விழுப்புரம் தொகுதி தபால் ஓட்டு அ.தி.மு.க.,வை முந்திய பா.ம.க.,
விழுப்புரம் தொகுதி தபால் ஓட்டு அ.தி.மு.க.,வை முந்திய பா.ம.க.,
விழுப்புரம் தொகுதி தபால் ஓட்டு அ.தி.மு.க.,வை முந்திய பா.ம.க.,
விழுப்புரம் தொகுதி தபால் ஓட்டு அ.தி.மு.க.,வை முந்திய பா.ம.க.,
ADDED : ஜூன் 04, 2024 11:41 PM
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகளில் வி.சி., முதலிடமும், பா.ம.க., இரண்டாமிடமும் பிடித்தன.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் மொத்தம் 15,03,115 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 11,54,467 பேர் ஓட்டு பதிவு செய்தனர். இந்த தொகுதியில் 76.52 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விபரம்:
வி.சி., ரவிக்குமார் 4,77,033, அ.தி.மு.க., பாக்கியராஜ் 4,06,330, பா.ம.க., முரளிசங்கர் 1,81,882, நா.த.க., களஞ்சியம் 57,242, நோட்டா 8,966, பகுஜன் சமாஜ் கட்சி 3,970, சுயேச்சைகள் ஆறுமுகம் 3,504, தர்மா 2,382, விவேகானந்தன் 1,953, அரசன் 1,842, விக்னேஷ்வரன் 1,656, சு.சுரேஷ் 1,397, பெரியான் 1,049, குணசேகரன் 963, விஜயன் 861, நாகராஜ 674, கா.சுரேஷ் 598, சத்தியராஜ் 415 ஓட்டுகள் பெற்றனர்.
தபால் ஓட்டுகள்
விழுப்புரம் தொகுதியில் 9,001 தபால் ஓட்டுகள் பதிவானது. இதில், 1,802 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள் ரவிக்குமார் 2,803, முரளிசங்கர் 1,862, பாக்கியராஜ் 1,827, களஞ்சியம் 476, நோட்டா 92, கலியமூர்த்தி 37, சு.சுரேஷ் 23, ஆறுமுகம் 17, விக்னேஷ்வரன் 13, பெரியான், விவேகானந்தன் தலா 8, அரசன், தர்மா தலா 7, கா.சுரேஷ் 6, நாகராஜ் 5, குணசேகரன், சத்தியராஜ் தலா 3, விஜயன் 2 ஓட்டுகளும் பெற்றனர்.
இதில், வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜை விட, 70,703 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.