/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 5,325 பேர் பங்கேற்பு விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 5,325 பேர் பங்கேற்பு
விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 5,325 பேர் பங்கேற்பு
விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 5,325 பேர் பங்கேற்பு
விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு: 5,325 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2024 05:24 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வை 5,325 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று நடந்தது. மாவட்ட அளவில் உள்ள உயர் பதவிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 8,018 பேர், தேர்வு எழுதுவதற்காக நுழைவு அனுமதி சீட்டு இணையதளம் வழியாக அனுப்பப்பட்டது. இந்த தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் 25 மையங்களில் நடந்தது.
தேர்வர்களை கண்காணிக்கும் பணிகளில், 3 பறக்கும் படை குழுவினரும், 6 நடமாடும் குழுக்களும் ஈடுபட்டனர்.
தேர்வு காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மையத்தில், குரூப் 1 எழுதும் தேர்வர்களை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த தேர்வில், 2693 பேர் ஆப்சென்ட் ஆகினர். 5,325 பேர் தேர்வு எழுதினர்.