/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நின்றிருந்த லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி நின்றிருந்த லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி
நின்றிருந்த லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி
நின்றிருந்த லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி
நின்றிருந்த லாரி மீது லாரி மோதி டிரைவர் பலி
ADDED : ஜூலை 14, 2024 05:22 AM
வானுார் : கிளியனுார் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்றிருந்த லாரியின் பின்னால் ஈச்சர் லாரி மோதியதில் டிரைவர் இறந்தார்.
வானுார், காந்தி வீதியைச் சேர்ந்தவர் அன்பு, 52; லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை சென்னை மார்க்கத்தில் இருந்து ஈச்சர் லாரியில், லோடு ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில், கிளியனுார் அடுத்த தேற்குணம் சந்திப்பு அருகே காலை 5:30 மணியளவில் சென்றபோது, டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஈச்சர் லாரி ஓட்டி வந்த அன்பு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த கிமியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.