/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி
மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி
மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி
மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி
ADDED : ஜூன் 08, 2024 04:15 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 54; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை மாட்டிற்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
உறவினர்கள் விவசாய நிலத்திற்குச் சென்று தேடியபோது அங்கு, உயர்மின்னழுத்த மின் கம்பி அறுந்து முருகன் மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.