ADDED : ஜூலை 07, 2024 04:19 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசாருக்கு நேற்று சித்தேரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமான அரிதாஸ் மகன் அருள்,24; என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு, 800 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அருள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அருளோடு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பில்லுார் நிர்மல்,24; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.