/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துரை மன்றம்
ADDED : ஜூலை 07, 2024 04:19 AM
வானூர்: டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கருத்துரை மன்றம் நடந்தது.
கிளியனூர் அடுத்த டி. பரங்கணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக உயிரியல் பூங்காக்கள் தினத்தையொட்டி விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய்கள் குறித்தும், நம்மை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துரை மன்றம் நடந்தது.
நிகழ்விற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெய் சாந்தி தலைமை தாங்கினார். உப்பு வேலூர் கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடை மருத்துவர் சுந்தரபாண்டியன் கருத்தாளராக பங்கேற்று, விலங்குகள் குறித்தும், பரவும் நோய்கள் குறித்தும், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்தும் கானொளி உதவியுடன் கருத்துரை வழங்கினார்.
இதில், பள்ளியின் தமிழ் ஆசிரியர் சுமதி, சமூகவியல் ஆசிரியர் வசந்தி, ஆசிரியர் ஜெகஷீஜா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் இளங்கோவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.