/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளநிலை படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு இளநிலை படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு
இளநிலை படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு
இளநிலை படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு
இளநிலை படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு
ADDED : ஜூலை 09, 2024 11:31 PM
விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கையின் தொடர்ச்சியாக வரும் 12ம் தேதி காலை 10.00 மணிக்கு பி.சி., பி.சி.எம்., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கான அனைத்து துறைகளுக்கான காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்போர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழின் அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம் 1, வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல் 1, ஆதார் நகல் 2, உரிய சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.