/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அனுமதியின்றி கட்சி தோரணம்; பா.ம.க., நிர்வாகிகள் மீது வழக்கு அனுமதியின்றி கட்சி தோரணம்; பா.ம.க., நிர்வாகிகள் மீது வழக்கு
அனுமதியின்றி கட்சி தோரணம்; பா.ம.க., நிர்வாகிகள் மீது வழக்கு
அனுமதியின்றி கட்சி தோரணம்; பா.ம.க., நிர்வாகிகள் மீது வழக்கு
அனுமதியின்றி கட்சி தோரணம்; பா.ம.க., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : ஜூலை 09, 2024 11:31 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அனுமதியின்றி கட்சி தோரணம், கொடிகள் கட்டிய பா.ம.க., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சோழகனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பா.ம.க., கிளை செயலாளராக உள்ளார். இவர், இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று முன்தினம் அனுமதியின்றி, சோழகனுார் மந்தக்கரை பகுதியில் பா.ம.க., கட்சி, தோரணங்களை கட்டியிருந்தார். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார், பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதே போல், விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பா.ம.க., ஒன்றிய செயலாளர். இவர், நேற்று முன்தினம், உரிய அனுமதியின்றி ஆசாரங்குப்பம் கடை வீதியில், சாலையோரம் கட்சி கொடிகளை கட்டி வைத்திருந்தார்.இதுகுறித்து, அப்பகுதி வி.ஏ.ஓ., தாஸ் கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.