ADDED : ஜூலை 09, 2024 11:30 PM
மயிலம் : கூட்டேரிப்பட்டு எல்லையம்மன் கோவிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், பன்னீர் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோயில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.