ADDED : ஜூலை 08, 2024 04:50 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினி லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தென்குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் சத்தியமூர்த்தி, 29; சாலாமேடு அருள், 25; ஆகியோர் மினி லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததுதெரிந்தது. உடனே, அவர்களது மினி லாரியை பறிமுதல் செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.