ADDED : ஜூலை 08, 2024 04:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்து தகராறில் உறவினரைகத்தியால் வெட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 45; அவரது சகோதரர் குமரன், 47; இவர்கள், தங்களது பூர்விகமான 2.50 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில், பயிரிடுவதற்காக, உரம் வாங்கிய செலவு செய்ததற்கான தொகையில் பாதியை தருமாறு வெங்கடாஜலபதி, குமரனிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
அப்போது, வெங்கடாஜலபதி மனைவி சரஸ்வதி, 35; அவரது மைத்துனர் சக்திவேல், 44; ஆகியோரை குமரன் தாக்கினார். இதில், சரஸ்வதி, சக்திவேல் இருவரும் காயமடைந்தனர்.
இது குறித்து, சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், குமரன் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.