Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்

பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்

பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்

பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்

ADDED : ஜூலை 08, 2024 04:50 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மோதிய விபத்தில் வீட்டு முன் நின்றிருந்த தாய், மகன்கள் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி தமிழ்ச்செல்வி, 30; அவரது மகன்கள் கமலேஷ், 13; ஸ்ரீராம், 10; ஆகியோர், கடந்த 3ம் தேதி அவர்களது வீட்டு வாசலில் சாலையோரம் நின்றிருந்தனர்.அப்போது, சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தமிழ்செல்வி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us