/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:22 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் அரசு வேலை வாங்கி தருவதாக மாற்றுத் திறனாளியை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையம் முன் நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு, பொருளாளர் உமா, கிளைச் செயலாளர் ரங்கபாபு முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்
போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் முருகன், பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் முத்துவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏமாற்றி பணத்தைப் பெற்றவர் மீது மோசடி வழக்குப் பதிந்து கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.