ADDED : ஜூன் 19, 2024 01:22 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் வீடூர், அங்கிணிகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபரணி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் ஏற்ற வந்த மூன்று பேரை போலீசார் பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பியோடினார்.
பிடிபட்ட இருவரும், அங்கிணிகுப்பம் பாஸ்கர், 21; வீடூர் கல்லாங்குப்பம் சவுரி, 27; என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து, இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய அங்கிணிகுப்பம் மணியை தேடி வருகின்றனர்.