Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ம.க.,பிரமுகர் திருமண விழா பேனரில் கட்சியிலிருந்துகட்டம் கட்டப்பட்டவர் படம் இருந்தால் திடீர் சிக்கல் *படம் மறைக்கப்பட்ட பிறகு பங்கேற்ற சவுமியா

பா.ம.க.,பிரமுகர் திருமண விழா பேனரில் கட்சியிலிருந்துகட்டம் கட்டப்பட்டவர் படம் இருந்தால் திடீர் சிக்கல் *படம் மறைக்கப்பட்ட பிறகு பங்கேற்ற சவுமியா

பா.ம.க.,பிரமுகர் திருமண விழா பேனரில் கட்சியிலிருந்துகட்டம் கட்டப்பட்டவர் படம் இருந்தால் திடீர் சிக்கல் *படம் மறைக்கப்பட்ட பிறகு பங்கேற்ற சவுமியா

பா.ம.க.,பிரமுகர் திருமண விழா பேனரில் கட்சியிலிருந்துகட்டம் கட்டப்பட்டவர் படம் இருந்தால் திடீர் சிக்கல் *படம் மறைக்கப்பட்ட பிறகு பங்கேற்ற சவுமியா

ADDED : மார் 14, 2025 04:52 AM


Google News
பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த மாஜி நகர செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது படம் திருமண விழா பேனரில் இருந்தால், பசுமை தாயகம் சவுமியா கலந்து கொள்வதில் தயக்கம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் ஹாலில் கடந்த டிச.28ல் நடந்த பா.ம.க.,பொதுக்குழுவில், கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், தலைவர் அன்புமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் பகிரங்கமாக வெடித்தது.

இதற்கு காரணம், ராமாசின் மகள் வழி பேரனான திண்டிவனத்தை சேர்ந்த பிரபல மருத்துவர் பரசுராமனின் மகன் முகுந்தனை, கட்சியின் இளைஞரணி தவைராக நியமிக்கும் அறிவிப்பை ராமதாஸ், பொதுக்குழு கூட்டத்தில் வெளியிட்டதுதான்.

கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அன்புமணி பனையூரில் தனி அலுவலகம் உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து சந்திக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடும் ் அளவிற்கு நிலைமை சென்றது.

கூட்டத்தில் அன்புமணி பேசிய கருத்திற்கு கட்சி நிர்வாகிகள் பலர் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர். இதில் திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் பா.ம.க.,நகர செயலாளர் ராஜேஷ், மீடியா கண்ணில் அதிகம் பட்டு பேசும் பொருளானார். இதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் பொது வெளியில், அன்புமணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை பலரிடம் தெரிவித்து வந்தது. கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12 ம் தேதி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜேஷ் நீக்கப்படுவதாகவும், பா.ம.க.,வினர் அவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் அறிவித்தார்.

அன்புமணிக்கு ஆதரவு நிலை எடுத்தவர் கட்சியிலிருந்து கட்டப்பட்டது பா.ம.க,.அரசியால் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் நீருபூத்த நெருப்பாக இன்றளவும் புகைந்து கொண்டுதான் இருக்கின்றது என்று கட்சியினர் மத்தியில் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், கட்சியின் நிறுவனரால் மாநில இளைஞணி செயலாளராக முகுந்தன் நியமிக்கப்பட்டும், அவர் செயல்படாமல் முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்ட ராஜேஷின் ஆதரவாளர் திருமணம் திண்டிவனத்தில் சமீபத்தில் நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் தலைவர் சவுமியா கலந்து கொண்டார்.

அவர் வருகையையொட்டி, திருமணம் மண்டபம் செல்லும் வழியில் வைத்துள்ள பேனரில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராஜேஷ் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்த கட்சி நிர்வாகிகள் பலர் திருமணத்திற்கு செல்லும் முன் சவுமியாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சூழ்நிலையில், திருமண வரவேற்பிற்காக வைத்திருந்த டிஜிட்டல் பேனரில், ராஜேஷ் படம் மறைக்கப்பட்டதை தொடர்ந்து, சவுமியா திருமணத்திற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

-நமது நிருபர்-.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us