/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 'டாஸ்மாக் கடையை எடுத்துவிட்டால் ஊழல் நடக்காது' *பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல் 'டாஸ்மாக் கடையை எடுத்துவிட்டால் ஊழல் நடக்காது' *பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல்
'டாஸ்மாக் கடையை எடுத்துவிட்டால் ஊழல் நடக்காது' *பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல்
'டாஸ்மாக் கடையை எடுத்துவிட்டால் ஊழல் நடக்காது' *பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல்
'டாஸ்மாக் கடையை எடுத்துவிட்டால் ஊழல் நடக்காது' *பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல்
ADDED : மார் 14, 2025 04:51 AM
திண்டிவனம்: தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் கூறியுள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று காலை திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு 2021 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நான்கு பட்ஜெட்டுகளை வெளியிட்டது. திமுக., அரசு நாளை(14 ம் தேதி) பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அடுத்த நாள் 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றது. இதுதான் தி.மு.க.,வின் கடைசி பட்ஜெட்டாகும்.
ஏற்கனவே வெளியிட்டுள்ள படஜெட்டில் எராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ள படி தடுப்பணைகள் கட்டப்படவில்லை. புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் நடக்கவில்லை.
தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிடும் அரசாகவே உள்ளது. கடந்த பட்ஜெட்டில் கூறியிருந்தவற்றில் எந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, எந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு சத்தீஸ்கரில் ரூ.3120,ஒரிசாவில் ரூ. 3100 கொடுக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை ரூ 3500 ஆக உயர்த்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு உயர்த்தவில்லை. சுவாமிநாதன் கமிஷன் கூறியது போல தமிழகத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3450 கொள்முதல் விலை வழங்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.
சென்னையில் 22ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்திற்கு 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக துணை முதல்வரை தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். கர்நாடக அரசின் நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணை கட்ட ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமிழகத்திற்கு அழைக்கக்கூடாது என்று 8ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டேன்.
ஆனால் கர்நாடகாவை அழைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்துள்ளார். புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ 2500 உயர்த்தி இருப்பது வரவேற்கதக்கது. தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் தற்போது 1. 16 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை ரூ. ஆயிரம் வழங்குவது ஏற்கதக்கதல்ல. தமிழகத்தில் அனைருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும். உரிமை தொகையை ரூ.ரூ 2 ஆயிரமாக உயர்த்தி தரவேணடும்.
தமிழகத்தில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் கூட அமைக்கப்படவில்லை. 1990 வரை அமைக்கப்பட்ட காற்றாலைகள் சேதமடைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் 2ம் இடத்திற்கும், சூரிய ஒளி மின் உற்பத்தியில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்தவேண்டும்.
நியாயவிலைக்கடைகள் மூலம் சோதனை அடிப்படையில் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைக்கு தலா 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான அளவு ராகி கொள்முதல் செய்யாததால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றார். இதை கருத்தில் கொண்டு ராகி கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும்.
தொடர்ந்து, அவரிடம், மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தமிழக எம்.பி.,க்களை அநாகரீகமானவர்கள் என்று கூறியது குறித்து கேட்டதற்கு, '' தமிழர்களின் தொன்மை கால நாகரீகத்தையும், ஆரம்ப காலத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியது பற்றிய புத்தகங்களை அவருக்கு கொடுக்க வேண்டும். அந்த புத்தகங்களை அவர் படிச்ச பிறகு தான் கூறியது தவறுதான் என்று அவர் ஒத்துக்கொள்ள வேண்டும், என்று கூறினார்.
மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, ஊழல் நடந்துள்ளது பற்றி கூறியது பற்றி கேட்டதற்கு, டாஸ்மாக் என்றால் ஊழல்தான் நடக்கும். டாஸ்மாக்கை எடுத்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது. திண்டுக்கல் அருகே சுங்கச்சாவடியை பொது மக்கள் அடித்து நொறுக்கப்பட்டது அவர்களின் கோபத்தின் வெளிப்பாடுதான். ஒரு காலத்தில் நாங்களும் அதை செய்தோம் என்று ராமதாஸ் கூறினார்.
பாக்ஸ் மேட்டர்;
ராஜ்யசபா சீட்டிற்குஅடிபோடும் பா.ம.க,
தமிழகத்தில் விரைவில் ராஜய்சபா சீட் காலியாக உள்ளது பற்றியும், அதற்கு பா.ம.க.,சார்பில் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேட்டதற்கு, '' நீங்கள் வேண்டுமென்றால்(நிருபர்கள்) சிபாரிசு செய்து வாங்கி கொடுங்கள் என்று கூறினார். தொடர்ந்து ராஜ்யசபா சீட்டு விஷயமாக தி.மு.க.,வை தவிர மற்ற கட்சிகளிடம் பேசுவோம் என்று ராமதாஸ் சூசமாக தெரிவித்தார்.
சமீபத்தில சேலத்தில் அ.தி.மு.க.,பொது செயலாளர் பழனிச்சாமியை, பா.ம.க.,வின் கவுரவ தலைவர் மணி, ராஜ்யசபா சீட் பா.ம.க.,விற்கு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.