/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தி.மு.க.,பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தி.மு.க.,பொதுக்கூட்டம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தி.மு.க.,பொதுக்கூட்டம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தி.மு.க.,பொதுக்கூட்டம்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தி.மு.க.,பொதுக்கூட்டம்
ADDED : மார் 14, 2025 04:53 AM

வானூர்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் வரவேற்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், வழக்கறிஞர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சம்பத், பஞ்சநாதன், கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, வானூர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை, ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, மைதிலி ராஜேந்திரன், கணேசன், செல்வமணி, பிரபாகரன், தெய்வசிகாமணி, முருகவேல், மும்மூர்த்தி, ராஜா, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, வளவனூர் பேரூராட்சி செயலாளர் ஜீவா, கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் அன்பு, பிரேமா குப்புசாமி, கவுதம், பனிமொழி செல்வரங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.