/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நேமூரில் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நேமூரில் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம்
நேமூரில் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம்
நேமூரில் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம்
நேமூரில் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம்
ADDED : மார் 14, 2025 04:54 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி நேமூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, கல்பட்டுராஜா, ஜெயபால் ,மும்மூர்த்தி முன்னிலை வகித்தனர் .மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பேச்சாளர்கள் பிரபாகரன், ஜின்னா ஆகியோர் மும்மொழி கொள்கை எதிர்ப்பு, மாநில அரசிற்கு தரவேண்டி நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதிகள் குறித்து பேசினர் .
கூட்டத்தில் ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி,துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி,தலைமை ெசயற்குழு செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் கற்பகம், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கில்பர்ட் ராஜ்,பாரதி, கண்காணிப்பு குழ எத்திராசன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், வேல் முருகன், தொழில்நுட்ப அணி சாம்பசிவம் , இலக்கிய அணி கலைச் செல்வன் ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதி சுரேஷ் ,முகிலன், அருணாசலம், இளவரசி, சாவித்திரி,செல்வம் ,ராஜேஸ்வரி ,சத்யா, துணை செயலாளர் வெற்றிவேல், சிற்றுாராட்சி சங்க தலைவர் சங்கர், செயலாளர் அரசுகுமாரி அரிகிருஷ்ணன்,துணை தலைவர் சண்முகானந்தம், பொருளாளர் கனிமொழி சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கெ ாண்டனர். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.