/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஸ்கூட்டர் மீது கார் மோதி ஒருவர் பலி ஸ்கூட்டர் மீது கார் மோதி ஒருவர் பலி
ஸ்கூட்டர் மீது கார் மோதி ஒருவர் பலி
ஸ்கூட்டர் மீது கார் மோதி ஒருவர் பலி
ஸ்கூட்டர் மீது கார் மோதி ஒருவர் பலி
ADDED : ஜூன் 03, 2024 06:33 AM
அவலுார்பேட்டை : செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானாதிக்கம், 54; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து சொந்த ஊருக்கு வளத்தி வழியாக ஸ்கூட்டரில் செஞ்சி நோக்கி சென்றார்.
வளத்தி அடுத்த நீலாம்பூண்டி மெயின் ரோடில் வந்தபோது, பின்னால் வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஞானாதிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.