/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : ஜூன் 03, 2024 06:32 AM

விழுப்புரம் : விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வரும் 4ம் தேதி நடக்கிறது.
ஓட்டு எண்ணும் மையத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை தொடர்ந்து, எண்ணிக்கை மேற்கொள்ளும் வகையில், பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வழிகள். தபால் ஓட்டுகள் எண்ணும் பகுதி, சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணும் பகுதிகள், ஓட்டு எண்ணும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேஜைகள். கண்காணிப்பு கேமராக்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்லும் வழிகள், அலுவலர்கள் செல்லும் வழிகள், குடிநீர், மின் விசிறி, மின் விளக்கு, ஒலிப்பெருக்கி வசதி, தடையில்லா மின்சார வசதி, கூடுதலாக ஜெனரேட்டர், தீயணைப்புக்கருவி, கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை பொது பார்வையாளர், தேர்தல் அலுவலர், முகவர்கள், காவலர்கள், ராணுவத்தினர், மருத்துவக்குழு அறைகள், தொலைத்தொடர்பு வசதி, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மையம், உணவு வழங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.