/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்டு 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்டு
30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்டு
30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்டு
30 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்டு
ADDED : ஜூன் 03, 2024 06:32 AM
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி புவனேஷ்வரி, 45; இவர், நேற்று முன்தினம் அங்குள்ள நிலப்பகுதியில் தனது கறவை பசு மாட்டை நீண்ட கயிற்றில் கட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றிருந்தார்.
மாலை 6:30 மணிக்கு மேல் சென்று பார்த்தபோது, பசுவைக் காணவில்லை. அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் இருந்து கத்துவது கேட்டு அங்கு சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் பசு விழுந்திருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் முன்னணி வீரர் பிரபு தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் இரவு 9:00 மணிக்கு பசுவை மீட்டனர்.