/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷகம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷகம்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷகம்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷகம்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷகம்
ADDED : ஜூன் 03, 2024 06:33 AM

வானுார், : வானுார் அருகே ஒட்டை பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
ஒட்டை கிராமத்தில் அய்யனாரப்பன், பாலமுருகன், மகா காளியம்மன், வெங்கடேசபெருமாள், முத்து மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிேஷக விழா கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு யாக சாலை பூஜை துவங்கியது. மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு அய்யனாரப்பனுக்கும், 7:45 மணிக்கு பாலமுருகன், 8:30 மணிக்கு மகா காளியம்மனுக்கும் தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.