ADDED : ஜூன் 19, 2024 01:27 AM
திருவெண்ணெய்நல்லுார்,: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி முதியவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் மடப்பட்டு - திருக்கோவிலுார் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக பின்னால் வந்த பைக் ரங்கராஜ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.