/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி
விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி
விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி
விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் விழுப்புரத்தில் ஜப்தி
ADDED : ஜூன் 19, 2024 01:27 AM

விழுப்புரம்: கூலித் தொழிலாளி இறந்த சம்பவத்தில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் அப்துல்கரீம்,55; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலையில் பைக்கில் வந்தபோது, விழுப்புரம் கோட்ட அரசு பஸ் மோதி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.
அப்துல்கரீம் மனைவி மும்தாஜ், விபத்து நஷ்ட ஈடு கோரி விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நஷ்ட ஈடாக ரூ.18 லட்சத்து 38 ஆயிரத்து 750 வழங்க கடந்த 2022, ஜூலை 19ல் உத்தரவிட்டார். நஷ்ட ஈடு வழங்காததால், கடந்தாண்டு மார்ச் 13ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி வெங்கடேசன், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வட்டியோடு 26 லட்சத்து 27 ஆயிரத்து 210 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
நஷ்டஈடு தொகை வழங் காததால் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய, கடந்த 10ம் தேதி நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டார். அதனையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை வழக்கறிஞர் வேலவன், மனுதாரர் மும்தாஜ் முன்னிலையில் அமீனா திவ்யா ஜப்தி செய்தார்.