/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஒட்டிகள் குழப்பம் புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஒட்டிகள் குழப்பம்
புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஒட்டிகள் குழப்பம்
புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஒட்டிகள் குழப்பம்
புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஒட்டிகள் குழப்பம்
ADDED : ஜூன் 23, 2024 05:47 AM

திண்டிவனம்: திண்டிவனம் - விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
திண்டிவனத்தில், மரக்காணம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன.
இதில் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக தென்மார்க்கங்களுக்கு செல்லும் வாகனங்கள் (விழுப்புரம் வழி), புறவழிச்சாலை வழியாக மேம்பாலம் பகுதியை கடந்து செல்கிறது.
மரக்காணம் மேம்பாலத்தின் துவக்க பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி செல்லும் பாதையை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படாமல் உள்ளது.
இதனால், சென்னையிலிருந்து திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் கவனக்குறைவாக விழுப்புரம் செல்லும் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், மேம்பாலத்தின் துவக்க பகுதியில் (திண்டிவனம் புறவழிச்சாலை) நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுச்சேரிக்கு செல்லும் வழியை தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.