Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாராயம், கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

சாராயம், கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

சாராயம், கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

சாராயம், கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

ADDED : ஜூன் 23, 2024 05:46 AM


Google News
வானுார்: கிளியனுார் பகுதியில் சாராயம் மற்றும் கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த வி.கேணிப்பட்டு பகுதியில் கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 52; என்பவர் புதுச்சேரி மாநில சாராயம் 5 லிட்டர் வைத்திருந்தது தெரிய வந்தது. உடன், போலீசார் அவரை கைது செய்தனர்.

இதே போன்று தேற்குணம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடத்திய சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 45; சரவணன், 31; ஆகிய இருவரும் தலா, 5 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், மொளசூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந் வழியாக பைக்கில் வந்த, 2 பேரை சோதனை செய்ததில் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடன், கஞ்சாவை பறிமுதல் செய்து, புதுச்சேரி, அரியாங்குப்பம் முகமது யூனஸ், 25; அதே பகுதியைச் சேர்ந்த சேந்தன், 21; என்பவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us