ADDED : ஜூன் 23, 2024 05:46 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நர்சிங் மாணவியை காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்., மகள் யமுனா, 16; விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள ஒரு செவிலியர் பயிற்சி பள்ளியில், டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறர்.
இவர், கடந்த 19ம் தேதி பயிற்சி முடிந்து வீட்டிற்கு சென்றவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.