ADDED : ஜூன் 20, 2024 03:40 AM

கண்டாச்சிபுரம்: தாயை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கண்டாச்சிபுரம், தும்பரமேடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி, 48; கொத்தனார். இவரது மனைவி லட்சுமி, 45. இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதில் கோபித்துக்கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன், சென்னைக்கு சென்று குப்புசாமி வேலை செய்து வந்தார். ஜூன் 6ம் தேதி வீட்டிற்கு வந்த குப்புசாமி மனைவிடம் பேசாமல் மீண்டும் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் வேதனையடைந்த லட்சுமி கடந்த ஜூன் 10ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் குமரேசன், 22, அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, லட்சுமியை தேடி வருகின்றனர்.