ADDED : ஜூன் 20, 2024 03:39 AM
செஞ்சி : செஞ்சியில் நகர காங்., சார்பில் செஞ்சி கூட்ரோட்டில் முன்னாள் தலைவர் காங்., ராகுல், மறைந்த காங்., தலைவர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திருமால், நகர பொது செயலாளர் ஜான் பாஷா, பொருளாளர் சேகர், நிர்வாகிகள் சீனிவாசன், விஐயகுமார், ராஜா, முனுசாமி, கோதண்டம், பூங்காவனம், தனலட்சுமி, மகிளா காங்., சங்கீதா, கெங்கலட்சுமி, ஊடக பிரிவு ஷபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.